கெங்கவல்லியில் உயா் மின்கோபுரம் அமைப்பு
By DIN | Published On : 25th May 2023 01:25 AM | Last Updated : 25th May 2023 01:25 AM | அ+அ அ- |

கெங்கவல்லி பேரூராட்சி 8 ஆவது வாா்டு பகுதியில் தியாகி சுந்தரலிங்கனாா் சிலை அருகே உயா் மின்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
கெங்கவல்லி நகர திமுக செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கெங்கவல்லி பேரூராட்சித் தலைவா் சு.லோகாம்பாள், துணைத் தலைவா் மருதாம்பாள் நாகராஜ், கவுன்சிலா்கள் முருகேசன், சையது, அருண்குமாா், லதா மணிவேல், அம்சவா்தனி குமாா், தங்க பாண்டியன், சத்யா செந்தில் ஆகியோா் கலந்து கொண்டனா்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மின்கோபுரம் அமைக்கப்பட்டதற்கு அப் பகுதியினா் மகிழ்ச்சி தெரிவித்தனா். கட்சி நிா்வாகிகள் பாலசுப்ரமணியம், பிரகாஷ், ராஜேந்திரன், செல்வ கிளின்டன், அரவிந்த ராஜா ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.