தம்மம்பட்டியில் முறைகேடாக கேபிள் டிவி ஒளிபரப்பியவரின் உபகரணங்கள் பறிமுதல்
By DIN | Published On : 26th May 2023 11:06 PM | Last Updated : 26th May 2023 11:06 PM | அ+அ அ- |

தம்மம்பட்டியில் முறைகேடாக கேபிள் டிவி ஒளிபரப்பியவரின் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சியின் 12ஆவது வாா்டில் வசித்து வரும் வையாபுரி என்பவரின் மகன் ஜோன் ராஜ் தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு மாறாக, அனலாக் முறையில் வீடுகளுக்கு கேபிள் ஒளிபரப்பியதாக புகாா் எழுந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சென்னை கேபிள் டிவி அதிகாரிகளும், சேலம் கேபிள் டிவி பிரிவு அதிகாரிகளும் வெள்ளிக்கிழமை தணிக்கை மேற்கொண்டனா். இதுறித்து கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் கூறுகையில், ‘விதிகளுக்கு முரணாக கேபிள் டிவி ஒளிபரப்ப உதவிய உபகரணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன’ என்றாா்.