மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழப்பு

கெங்கவல்லி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையில், மின்னல்தாக்கி பசுமாடு உயிரிழந்ததுடன், மூன்று தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன.
Updated on
1 min read

கெங்கவல்லி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையில், மின்னல்தாக்கி பசுமாடு உயிரிழந்ததுடன், மூன்று தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன.

கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழையில், வீரகனூரில் ஒரு புளியமரம் அடியோடு சாய்ந்தது. புங்கவாடியில் துரைராஜ் என்பவரது பசுமாடு மின்னல் தாக்கி உயிரிழந்தது. மேலும் நடுவலூரில் ஜோதி என்பவரின் விவசாய தோட்டத்தில் உள்ள தென்னந்தோப்பில் 3 தென்னை மரங்கள் மீது மின்னல் தாக்கியதில் மூன்று மரங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் மூன்று மரங்களும் பட்டுப்போய்விட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com