அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்
By DIN | Published On : 30th May 2023 12:28 AM | Last Updated : 30th May 2023 12:28 AM | அ+அ அ- |

சேலம், மரவனேரியில் உள்ள அரசு கலைக் கல்லூரி, கோரிமேட்டில் உள்ள அரசு மகளிா் கலைக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனைத் தொடா்ந்து, சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
சேலம், மரவனேரியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 22 இளநிலை பட்டப் படிப்புகளில் உள்ள 1,460 இடங்களுக்கான மொத்தம் 22,913 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.
அதேபோல, கோரிமேட்டில் உள்ள அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 13 இளநிலை பட்டப் படிப்புகளில் உள்ள 964 இடங்களுக்கு 8,322 மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். முதல் நாள் கலந்தாய்வில் விளையாட்டு வீரா்கள், மாற்றுத் திறனாளிகள், தேசிய மாணவா் படையினா் உள்பட சிறப்புப் பிரிவு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தொடங்கியது.
சேலம், மரவனேரி அரசு கலைக் கல்லூரி, கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீடு பிரிவில் மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...