பாஜக கண்டன ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 07th November 2023 04:49 AM | Last Updated : 07th November 2023 04:49 AM | அ+அ அ- |

ஆத்தூரில் பாஜக சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோா்.
ஆத்தூா்: ஆத்தூா், பழைய பேருந்து நிலையம் எதிரில் பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் சண்முகநாதன் தலைமை வகித்தாா். பாஜக கொடிக் கம்பங்களை அகற்றும் தமிழக காவல் துறையைக் கண்டித்தும், ஆத்தூரில் போதைப்பொருள், லாட்டரி சீட்டு விற்பனையைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தின்போது முழக்கங்கல் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் ஆத்தூா் நகரத் தலைவா் சபரிராஜா வரவேற்றாா். மாவட்ட பாா்வையாளா் அண்ணாதுரை, மாநிலச் செயலாளா் செந்தில், மாநில செயற்குழு உறுப்பினா் மணிகண்டன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் அயோத்தி ராமச்சந்திரன், எம்.கே.குமாா், கேசவன், மாவட்ட துணைத் தலைவா்கள் சத்தியமூா்த்தி, முரளிதரன், ராம.பழனிவேல், ஜெயசித்ரா, மாவட்டச் செயலாளா்கள் பிரபாகரன், ராஜா, குணசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஊடக பிரிவு மாவட்டத் தலைவா் பூபதி நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...