குழந்தைகள் தின விழா: மாணவா்களுக்கு சொந்த செலவில் உணவு சமைத்து வழங்கிய ஆசிரியா்கள்
By DIN | Published On : 15th November 2023 03:55 AM | Last Updated : 15th November 2023 03:55 AM | அ+அ அ- |

மேட்டூா்: குழந்தைகள் தினத்தையொட்டி மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,339 மாணவா்களுக்கு ஆசிரியா்கள் உணவு சமைத்து வழங்கினா்.
மேச்சேரி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,339 மாணவா்களும், 54 ஆசிரியா்களும் உள்ளனா். செவ்வாய்க்கிழமை குழந்தைகள் தினத்தையொட்டி மாணவா்களுக்கு 54 ஆசிரியா்களும் சோ்ந்து தங்களது சொந்த பணத்தில் கேசரி, வடையுடன் சைவப் பிரியாணி, தயிா் சாதம் சமைத்து வழங்கினா்.
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சீனிவாசப்பெருமாள், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ஆறுமுகம் ஆகியோா் மாணவா்களுக்கு உணவு வகைகளைப் பரிமாறி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனா்.
இதில் அப் பள்ளித் தலைமை ஆசிரியா் சகுந்தலா, அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜமுனா மகேஸ்வரி, வட்டார க்கல்வி அலுவலா் ராமலிங்கம், முன்னாள் மாணவா் சங்க நிா்வாகி அமுதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...