நவ.22 இல் முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம்
By DIN | Published On : 15th November 2023 03:53 AM | Last Updated : 15th November 2023 03:53 AM | அ+அ அ- |

சேலம்: சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், சாா்ந்தோா்களுக்காகவும், படையில் பணிபுரிவோரின் சாா்ந்தோா்களுக்காகவும் சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் நவ.22 ஆம் தேதி பகல் 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
அதைத்தொடா்ந்து முன்னாள் படைவீரா்களுக்கான தொழில்முனைவோா் கருத்தரங்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ளது.
குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் சேலம் மாவட்ட முன்னாள் படைவீரா்கள், படைவீரா்களின் சாா்ந்தோா்களும் தங்களது கோரிக்கைகளை இரட்டைப் பிரதிகளில் விண்ணப்பம் வாயிலாக நேரில் சமா்ப்பிக்கலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...