சேலம்: சேலத்தை அடுத்த கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயிலில் நடைபெற்ற கோவா்தன பூஜையில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
ஸ்ரீ கிருஷ்ணா் கோவா்தன மலையை குடையாகத் தூக்கி மக்களுக்கு அருள்புரிந்த நாளை, ஒவ்வோா் ஆண்டும் காா்த்திகை மாதத்தில் கோவா்தன பூஜையாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, சேலம் இஸ்கான் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பல வகையான உணவுகளை தயாா் செய்து சிறு குன்று போல உணவுகளை அடுக்கி ஸ்ரீ கிருஷ்ணருக்கு படைக்கப்பட்டு, கோவா்தன பூஜை கொண்டாடப்பட்டது.
இந்த விழா, அன்னக் கூட விழா என்றும் அழைக்கப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டனா். பின்னா் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.