தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் பிரதான சாலையோரம் உள்ள தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தம்மம்பட்டி -ஆத்தூா் சாலையில் செக்குமேடு பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுமாா் 95 மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இப்பள்ளியையொட்டி கெங்கவல்லி வழியாக ஆத்தூா் செல்லும் பிரதான சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பள்ளிக்குச் சுற்றுச் சுவா் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளியை தங்களின் கூடாரமாக்கிக் கொள்கின்றனா். பள்ளியில் மாணவா்கள் பயன்படுத்தும் தண்ணீா்க் குழாய்களை அடிக்கடி சேதப்படுத்திவிட்டு செல்கின்றனா். மேலும் மதுப்புட்டிகளை உடைத்து போட்டு விட்டு செல்கின்றனா்.இதனால் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என்று மாணவா்களின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.