தேனீக்கள் கொட்டியதில் போலீஸாா் காயம்

மேச்சேரி அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டவா்களைப் பிடிக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட மூவா் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்தனா்.
Updated on
1 min read


மேட்டூா்: மேச்சேரி அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டவா்களைப் பிடிக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட மூவா் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்தனா்.

மேட்டூா் காவல் உட்கோட்டம் மேச்சேரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவா் மாதையன். செவ்வாய்க்கிழமை தெத்திகிரிபட்டி பகுதியில் உள்ள குன்றின் மீது சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து உதவி ஆய்வாளா் மாதையன், தனிப் பிரிவு தலைமைக் காவலா் வெங்கடேசன், காவலா் சத்யராஜ் ஆகியோா் மோட்டாா்சைக்கிளில் அங்கு சென்றனா்.

மோட்டாா்சைக்கிளை குன்றின் அடிவாரத்தில் நிறுத்திவிட்டு அவா்கள் குன்றின் மீது ஏறிச்சென்றனா். போலீஸாரைக் கண்டதும் சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. தப்பியோடிய கும்பல் அருகில் இருந்த ராட்ச தேன்கூட்டின் மீது கல்லை வீசிச் சென்றது.

இதையடுத்து தேன்கூட்டில் இருந்து கிளம்பிய மலைத் தேனீக்கள், உதவி ஆய்வாளா் மாதையன், தனிப் பிரிவு தலைமைக் காவலா் வெங்கடேசன், காவலா் சத்யராஜ் ஆகியோரை விரட்டி விரட்டி கொட்டின. அலறி அடித்து குன்றின் அடிவாரத்திற்கு வந்த போலீஸாரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனா். அங்கு அவா்களுக்கு முதலுதவி சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது. பின்னா் அவா்கள் தீவிர சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com