மேட்டூா்: மேட்டூா், ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மேட்டூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
மேட்டூா், ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும் மேட்டூா் வருவாய் கோட்டாட்சியருமான தணிகாசலம் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் மேட்டூா், ஓமலூா், காடையாம்பட்டி வட்டாட்சியா்கள், தோ்தல் துணை வட்டாட்சியா்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் பங்கேற்றனா்.
சிறப்பு முகாம்கள் நடைபெறும் மையங்களில் ஏதேனும் குறைகள் உள்ளதா என அரசியல் கட்சியினரிடம் வாக்காளா் பதிவு அலுவலா் கேட்டறிந்தாா்.
மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பெயா் சோ்த்தல், நீக்கல் திருத்த படிவங்கள் 3,103, ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 3,416 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று மேட்டூா் வருவாய் கோட்டாட்சியா் தணிகாசலம் தெரிவித்தாா்.
ஆலோசனைக் கூட்டத்தில் காடையாம்பட்டி வட்டாட்சியா் மாதேஷ், ஓமலூா் வட்டாட்சியா் புருஷோத்தமன், மேட்டூா் வட்டாட்சியா் விஜி, மேட்டூா் நகராட்சி ஆணையா் நித்யா, வருவாய் கோட்டாட்சியா் நோ்முக உதவியாளா் லெனின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.