வாழப்பாடி அருகே பள்ளிப் பேருந்துகள் மீது தனியார் பேருந்து மோதல்:  10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்

வாழப்பாடி அருகே, ஒரே நேரத்தில் தனியார் பள்ளிக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் மீது, தனியார் பேருந்து மோதியதில் பள்ளிக் குழந்தைகள் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 
பள்ளிப் பேருந்து.
பள்ளிப் பேருந்து.

வாழப்பாடி அருகே, ஒரே நேரத்தில் தனியார் பள்ளிக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் மீது, தனியார் பேருந்து மோதியதில் பள்ளிக் குழந்தைகள் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் இயங்கும் தனியார் பள்ளிக்கு சொந்தமான பேருந்துகள் இரண்டு, பள்ளி குழந்தைகளை ஏற்றுக் கொண்டு இன்று காலை பெரிய கிருஷ்ணாபுரம் அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றது. அப்போது, ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து, இரு பள்ளிப் பேருந்துகள் மீதும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பலமாக மோதியது.

இந்த விபத்தில் இரண்டு பள்ளிப் பேருந்துகளில் பயணித்த பள்ளிக் குழந்தைகள் பத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று பள்ளிக் குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிப் பேருந்து விபத்தானது குறித்து தகவல் வெளியானதால் பெற்றோர்கள் விபத்து நடந்த பகுதியில் குவிந்ததால் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

☝️விபத்து நடந்த பகுதிகள் குவிந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள்.

ஏத்தாப்பூர் போலீஸார் வாகனங்களை விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com