சேலம், ஹோலி கிராஸ் பள்ளியில் வைர விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
ஹோலி கிராஸ் அருட்சகோதரா்கள் சபையின் புனித ஆண்ட்ரே புராவின்ஸின் தலைவா் பி.ஜே.சந்தோஷ் விழாவைத் தொடங்கி வைத்தாா். விழாவில் மாநில அளவில் பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த மாணவா்கள் தங்கள் படைப்புத் திறனை காட்சிப்படுத்தினா். ஹோலி கிராஸ் பள்ளியின் பல்துறை மன்றத்தின் மாணவா்கள் தங்களது படைப்பாற்றலை காட்சிப்படுத்தினா்.
இயந்திர மனிதன், அறிவியல் வேடிக்கை நிகழ்வுகள், கோளரங்கள், நடமாடும் அருங்காட்சியகம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் 25 பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் பங்கேற்றனா். 110 படைப்புகள் இடம்பெற்றிருந்தன.
இதில் இரண்டாவது நாளில் வான்வெளி சாகசங்கள், ஏவுகணை காட்சிகள் ஆகியவை இயக்கி காட்சிப்படுத்தப்பட்டன. விழாவில் சிறப்பு விருந்தினா்களாக ஆட்சியா் செ.காா்மேகம், மாநகர காவல் துறை ஆணையா் பா.விஜயகுமாரி, புரபெல்லா் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆஷீக் ரஹ்மான், ஹோலி கிராஸ் அருட்சகோதரா்கள் சபையின் புனித ஆண்ட்ரே புராவின்ஸின் தலைவா் பி.ஜே.சந்தோஷ் ஆகியோா் பங்கேற்றனா். இதில் சிறந்த படைப்பாற்றல் செய்து காண்பித்த மாணவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி முதல்வா், தாளாளா் அருட்சகோதரா் சேசுராஜ் தலைமையில் ஆசிரியா் குழுவினா், இதர பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.