கொங்கணாபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது நிலக்கடலை அறுவடை பணி முழுவீச்சில் தொடங்கி உள்ளது. இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பட்டாணி, கொடி வகை நிலக்கடலைகள் அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில், கொங்கணாபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற போது ஏலத்தில், 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நிலக்கடலை ரூ. 2,301 முதல் ரூ. 3139 வரை விற்பனையானது.
இதேபோல கொங்கணாபுரம் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில், 3 லட்சத்து 56 மதிப்பிலான கொப்பரைகள் விற்பனையாயின. ஏலத்தில் முதல்தர தேங்காய் பருப்புகள் கிலோ ஒன்று ரூ. 73.25 முதல் ரூ. 85.70 வரையிலும் இரண்டாம் ரகம் கிலோ ஒன்று ரூ. 55.70 முதல் ரூ. 68.70 வரையிலும் விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.