பெட்ரோல் குண்டு வீச்சு கண்டிக்கத்தக்கது
By DIN | Published On : 28th October 2023 12:34 AM | Last Updated : 28th October 2023 12:34 AM | அ+அ அ- |

பெட்ரோல் குண்டு வீச்சு கண்டிக்கத்தக்கது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
ஆத்தூரில் வெள்ளிக்கிழமை திருமண விழாவில் கலந்துகொண்ட தேமுதிக மாநிலப் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. ஆளுநா் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு என்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் ஆகும். பட்டப் பகலில் எல்லா இடங்களிலும் வெட்டி படுகொலை செய்யப்படுகிறாா்கள். இதுகுறித்து காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து குடும்பப் பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக தோ்தல் அறிக்கையில் தெரிவித்துவிட்டு, தற்போது தகுதி உள்ளவா்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது என தெரிவித்திருப்பது பொதுமக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அரசுப் பேருந்துகள் போதிய அளவில் செயல்படவில்லை. ஆம்னி பேருந்துகள் பண்டிகைக் காலங்களில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கின்றன.
தோ்தலுக்கு இன்னும் ஆறுமாத காலம் உள்ளதால், கூட்டணி, வேட்பாளா் குறித்து தலைவா் விஜயகாந்த் முடிவெடுத்து அறிவிப்பாா் என்றாா். அவருடன் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஏ.ஆா்.இளங்கோவன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
படவரி - ஆத்தூரில் செய்தியாளா்களை சந்தித்த தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...