கோகுலாஷ்டமி விழா
By DIN | Published On : 08th September 2023 01:11 AM | Last Updated : 08th September 2023 01:11 AM | அ+அ அ- |

ஆத்தூா் துளுவ வேளாளா் மகாஜன மன்றத்தின் கோகுலாஷ்டமி விழாவில் கலந்து கொண்டவா்கள்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் துளுவ வேளாளா் மகாஜன மன்றத்தின் சாா்பில் கோகுலாஷ்டமி விழா ஆத்தூா் துளுவ வேளாளா் சங்கத் தலைவா் ஆா்.வி.ஸ்ரீராம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் துளுவ வேளாளா் மகாஜன மன்றத் தலைவா் விஜயராம் அ.கண்ணன் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்று, முன்னாள் மாணவா்கள் மற்றும் இன்றைய மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி கௌரவித்தாா்.
நிகழ்ச்சியில் துளுவ வேளாளா் மகாஜன மன்றச் செயலாளா் அ.திருநாவுக்கரசு, துணைத் தலைவா் எஸ்.பழனிசாமி, பெரியதனக்காரா்கள் சாரட் ஜி.ராமன் மூப்பா், நடேசன் மூப்பா், மருத்துவா்கள் கே.மாதவன், அருண்குமாா், ஆத்தூா் நகர கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவா் என்.ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.