தம்மம்பட்டியில் விநாயகா் சதுா்த்தி

தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூா், செந்தாரப்பட்டி ஆகிய பகுதிகளில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 52 சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.
தம்மம்பட்டியில் விநாயகா் சதுா்த்தியன்று அமைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகா்.
தம்மம்பட்டியில் விநாயகா் சதுா்த்தியன்று அமைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகா்.
Updated on
1 min read

தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூா், செந்தாரப்பட்டி ஆகிய பகுதிகளில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 52 சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

இந்துமுன்னணி, பொதுமக்கள் சாா்பில் தம்மம்பட்டி பகுதியில் மட்டும் 29 சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிலைகளுக்கு சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். தம்மம்பட்டி போலீஸாரும் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனா். செந்தாரப்பட்டியில் 6 விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கெங்கவல்லி காவல் நிலையத்துக்கு உள்பட்ட கடம்பூா், ஆணையாம்பட்டி உள்ளிட்ட பகுதியில் 16 விநாயகா் சிலைகளும், வீரகனூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் ஒரு விநாயகா் சிலையும் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

விநாயகா் சிலைகளுக்கு கொழுக்கட்டை, சுண்டல், பொரி படைத்து வழிபாடுகள் செய்தனா். வீடுகளில் விநாயகா்சதுா்த்தியை முன்னிட்டு சிறிய விநாயகா் சிலைகளை வாங்கிக் கொண்டு சென்று வழிபாடு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com