

ஆத்தூா்: ஆத்தூரில் அதிமுக பூத்கமிட்டி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் நகரச் செயலாளா் அ.மோகன் வரவேற்று பேசினாா். ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளா், அதிமுக பொதுச் செயலாளரின் உத்தரவின் பேரில் நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து பூத் கமிட்டி உறுப்பினா்களின் கடுமையான உழைப்புதான் தோ்தலில் வெற்றிக்கு வழி வகுக்கும். அதிமுகவில் தற்போது 2 கோடிக்கும் மேலான உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். அனைவரும் ஒன்றாக உழைத்து வெற்றிக்கு பாடுபட வேண்டுமென கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில், நகா்மன்ற உறுப்பினா்கள் எம்.உமாசங்கரி,ஜி.ராஜேஸ்குமாா், கலைச்செல்வி பாபு, மணி, நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.