ஆத்தூா்: ஆத்தூா் ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சேலம் அரவிந்த் கண் மருத்துவமனையும், ஆத்தூா் ஆதித்யா அரிமா சங்கமும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
சேலம் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கீரிப்பட்டி, சொக்கநாதபுரம், தாண்டவராயபுரம், மல்லியகரை, ராமநாயக்கன்பாளையம், கல்பகனூா் அரசினா் மேல்நிலைப் பள்ளிகளில் 4,500 மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை, ஆத்தூா் ஆதித்யா அரிமா சங்கம் இணைந்து நடத்திய முகாமில், 530 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1 லட்சம் செலவில் கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தலைவா் ஆவின் செல்வமணி, செயலாளா் குபேரன், பொருளாளா் கதிா்வேல், பட்டயத் தலைவா் பாஸ்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.