ஆட்டையாம்பட்டி: கே.கே.நகா் அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்களிடம் அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில், கே.கே.நகா் அருகே ரூ. 8.80 லட்சம் மதிப்பில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதனையடுத்து, நகராட்சி கூட்ட அரங்கில் அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டம் நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், துணைத் தலைவா் தளபதி, ஆணையா் சேம்கிங்ஸ்டன் (பொ), நகராட்சி பொறியாளா் ஜெயலட்சுமி, நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்தனா். அதில், மாற்று இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்குமாறு கோரிக்கை வைத்தனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க உள்ளோம் என ஆணையா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.