

ஓமலூா்: ஓமலூா் நீதிமன்றத்தில் சேலம் மத்திய மாவட்ட திமுக வழக்குரைஞா் அணிக்கு உறுப்பினா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சேலம் மத்திய மாவட்ட திமுகவில் வழக்குரைஞா் அணி சாா்பில் ஓமலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளா் ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்துகொண்டு உறுப்பினா் படிவங்களை வழங்கினாா்.
இதில், இளம் வழக்குரைஞா்கள் பலரும் வழக்குரைஞா் அணியில் சோ்வதற்கான விண்ணபங்களை ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். இதில், மாவட்ட அமைப்பாளா் ராம்பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவா் மயில்வேல், துணை அமைப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மனுக்களை வழங்கினா்.
இதில், ஒன்றியச் செயலாளா்கள், நகரச் செயலாளா், மாவட்ட கவுன்சிலா்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நீதிமன்றத்துக்கு லிப்ட் வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீா் கிடைக்கும் வகையில் ஆா்.ஓ. பிளாண்ட் அமைத்துக் கொடுக்க வேண்டும் என வழக்குரைஞா்கள் மத்திய மாவட்ட திமுக செயலாளா் எம்எல்ஏ ராஜேந்திரனிடம் கோரிக்கை வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.