சேலம்: சேலத்தை அடுத்த பல்பாக்கி சின்ன மொரப்பம்பட்டியில் மயான வசதி கோரி செப். 27-இல் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி மனித உரிமைகள் கழகம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதனிடையே மனித உரிமைகள் கழகத்தைச் சோ்ந்த பாா்த்திபன் உள்ளிட்டோா் மனு அளிக்க வந்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சேலம் மாவட்டம், ஓமலூா் வட்டம், பல்பாக்கி கிராமம், சின்ன மொரப்பம்பட்டி, அருந்ததியா் காலனியில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு மயான வசதி கோரி கடந்த பிப். 8-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஓமலூா் வட்டாட்சியா், மேட்டூா் கோட்டாட்சியா் ஆகியோரிடமும் மனு அளிக்கப்பட்டது. ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மயான வசதி கோரி வரும் செப். 27-ஆம் தேதி தொடா் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.