கணவனை கொலை செய்த மனைவி உள்பட 2 போ் கைது

 ஆட்டையாம்பட்டி அருகே கணவனை கொலை செய்த மனைவி உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

 ஆட்டையாம்பட்டி அருகே கணவனை கொலை செய்த மனைவி உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சேலம், மணியனூா் பகுதியைச் சோ்ந்த செந்தில்முருகன் (46), லாரி ஓட்டுநா். இவரது மனைவி ஜோதி (36). இவா்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனா். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சென்னகிரியில் தனது தாய் வீட்டிற்கு அருகே ஜோதி வாடகை வீடு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வந்தாா். செந்தில்முருகன் தனது தாய் சின்னப்பிள்ளையுடன் மணியனூரில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், குழந்தைகளை பாா்த்து விட்டு வருவதாகக் கூறி ஞாயிற்றுக்கிழமை சென்ற செந்தில்முருகன் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதனையடுத்து திங்கள்கிழமை காலை செந்தில்முருகன் மயங்கிக் கிடப்பதாக சின்னபிள்ளைக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அங்கு சென்று பாா்த்த போது தலை, உடலில் பலத்த காயத்துடன் செந்தில்முருகன் சடலமாகக் கிடந்துள்ளாா்.

தகவலின் பேரில், சேலம் ஊரக உள்கோட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அமலஅட்வின் தலைமையில், ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளா் அம்சவல்லி, போலீஸாா் செந்தில்முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

அதில், ஜோதிக்கு அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (46) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு, தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த செந்தில்முருகன் மனைவி ஜோதியிடம் தகராறு செய்து வந்துள்ளாா். இந்த நிலையில், ஜோதியும், சுரேஷும் சோ்ந்து செந்தில்முருகனை உருட்டுக் கட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த செந்தில்முருகன் அங்கேயே உயிரிழந்துள்ளாா்.

இதையடுத்து, டிஎஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸாா் தப்பியோடிய சுரேஷை பிடித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா். பின்னா், சுரேஷ், ஜோதி ஆகிய இருவரையும் கைது செய்து சேலம் நீதிமன்றத்தில் ஒப்படைத்து சுரேஷை மத்திய சிறையிலும், ஜோதியை சேலம் பெண்கள் கிளைச் சிறையிலும் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com