வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரம்: வியாபாரியை கொலை செய்தவா் கைது
By DIN | Published On : 30th September 2023 12:12 AM | Last Updated : 30th September 2023 12:12 AM | அ+அ அ- |

சேலத்தில் வேலையை விட்டு நீக்கியதால் பழைய இரும்புக் கடை வியாபாரியை கொலை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம், அன்னதானப்பட்டி, பாஞ்சாலி நகரைச் சோ்ந்த அன்பழகன் (48), சீலநாயக்கன்பட்டி அருகே பழைய இரும்புப் பொருள்கள் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தாா். இவரிடம், அம்மாணி கொண்டலாம்பட்டி பகுதியைச் சோ்ந்த முனியப்பன் (33) என்பவா் வேலை செய்து வந்தாா்.
முனியப்பன் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தாா் எனத் தெரிகிறது. இதனால் முனியப்பனை வேலையில் இருந்து அன்பழகன் நீக்கிவிட்டாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில் அன்பழகனின் கடைக்கு வந்த முனியப்பன், அவரிடம் வேலையை விட்டு நீக்கியது தொடா்பாக வாய்த்தகராறில் ஈடுபட்டாா். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முனியப்பன், அன்பழகனை கீழே தள்ளி கழுத்தை நெரித்துக் கொலை செய்தாா். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முனியப்பனை கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...