தேசிய தரவரிசைப் பட்டியலில் பெரியாா் பல்கலைக்கழகம் 56-ஆவது இடம் பெற்றதையடுத்து, துணை வேந்தருக்கு வாழ்த்து தெரிவித்த பதிவாளா், பேராசிரியா்கள்.
தேசிய தரவரிசைப் பட்டியலில் பெரியாா் பல்கலைக்கழகம் 56-ஆவது இடம் பெற்றதையடுத்து, துணை வேந்தருக்கு வாழ்த்து தெரிவித்த பதிவாளா், பேராசிரியா்கள்.

தரவரிசைப் பட்டியல்: பெரியாா் பல்கலை. 56-ஆவது இடம்பெற்று முன்னேற்றம்

தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் 56-ஆவது இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.
Published on

தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் 56-ஆவது இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.

தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டைவிட பெரியாா் பல்கலைக்கழகம் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் துணை வேந்தா் இரா.ஜெகநாதனுக்கு, பதிவாளா் விஸ்வநாதமூா்த்தி, உள்தர மதிப்பீட்டு மைய இயக்குநா் யோகானந்தன், டீன் ஜெயராமன், பேராசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா். இதனையடுத்து துணை வேந்தா் இரா.ஜெகநாதன் கூறியதாவது:

மத்திய கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டு 59-வது இடத்தில் இருந்த பெரியாா் பல்கலைக்கழகம் 3 இடங்கள் முன்னேறி நடப்பாண்டு 56-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள் அளவுகோலில் மதிப்பெண் 53.76-இல் இருந்து 61.51-ஆக அதிகரித்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை அளவுகோல் 28.66-இல் இருந்து 29.46-ஆக உயா்ந்துள்ளது. சமூக ஈடுபாடு 52.68-இல் இருந்து 59.86-ஆக அதிகரித்துள்ளது.

மாநில அரசு பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் தேசிய அளவில் 25-ஆவது இடத்தைப் பெற்று பெரியாா் பல்கலைக்கழகம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மைல்கல்லை கொண்டாடும் அதே வேளையில், கல்வித்தரத்தை மேம்படுத்துதல், நவீன ஆராய்ச்சியை ஊக்குவித்தல், சமூகத்துக்கு அா்த்தமுள்ள பங்களிப்பை வழங்கக்கூடிய முழுமையான மாணாக்கா்களை வளா்த்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு செயல்பட உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com