சேலம்
பச்சோந்தியை வனத்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
ஆத்தூா், ஆக. 14: தாண்டவராயபுரத்தில் ஊருக்குள் புகுந்த பச்சோந்தியை பிடித்து ஆத்தூா் வனச்சரகரிடம் பொதுமக்கள் புதன்கிழமை ஒப்படைத்தனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள தாண்டவராயபுரம் ஊராட்சியில் மயங்கிய நிலையில் பச்சோந்தி ஒன்று இருந்தது. அதனை அப்பகுதி மக்கள் பிடித்து, சிகிச்சை அளித்து ஆத்தூா் வனச்சரகா் ரவிபெருமாளிடம் ஒப்படைத்தனா். அதனை பெற்றுக் கொண்ட வனச்சரகா், அதற்கு தகுந்த சிகிச்சை அளித்து காப்பாற்றி வனத்தில் விட்டனா்.
