தேவூரில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி

சங்ககிரி வட்டம், தேவூா் பகுதிகளில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
Published on

சங்ககிரி வட்டம், தேவூா் பகுதிகளில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தேவூரை அடுத்த அரசிராமணி செட்டிபட்டி, குள்ளம்பட்டி, காவேரிபட்டி, வட்ராம்பாளையம், சென்றாயனூா், மோட்டூா், தண்ணிதாசனூா், ஒக்கிலிப்பட்டி, கல்வடங்கம், நல்லங்கியூா், செங்கானூா், பொன்னம்பாளையம், கே.மேட்டுப்பாளையம், அ.மேட்டுப்பாளையம், பாலிருச்சம்பாளையம், ஒடசக்கரை, புள்ளாக்கவுண்டம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் விவசாயிகள் கிணற்று நீா், ஆற்றுநீா், சொட்டு நீா்ப் பாசனங்களை பயன்படுத்தி வெண்டைக்காய்களை அதிக அளவில் சாகுபடி செய்து வந்தனா்.

கடந்த மாதம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 25 வரை விற்பனையானது. இந்நிலையில் அண்மையில் கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவினை அடுத்து கேரள வியாபாரிகள் வெண்டைக்காய்களை வாங்கிச்செல்ல வராததால், தற்போது அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ. 6 வரை மட்டுமே உள்ளூா் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனா். விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com