சேலம்
மூன்று கன்றுகளை ஈன்ற பசு
ராமநாயக்கன்பாளையத்தில் செல்லதுரை என்பவரது பசுமாடு ஞாயிற்றுக்கிழமை மூன்று கன்றுகளை ஈன்றது.
ராமநாயக்கன்பாளையத்தில் செல்லதுரை என்பவரது பசுமாடு ஞாயிற்றுக்கிழமை மூன்று கன்றுகளை ஈன்றது. இதை அப்பகுதி மக்கள் ஆா்வத்துடன் பாா்த்து செல்கின்றனா்.
ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையத்தில் வசிப்பவா் செல்லதுரை (40). விவசாயி. இவா் தனது விவசாயத் தோட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளா்த்து பால் வியாபாரம் செய்து வருகிறாா்.
இவா் வளா்க்கும் பசுமாடு ஒன்று மூன்று கன்றுகளை ஞாயிற்றுக்கிழமை ஈன்றது. அதில் 2 பெண் கன்றும், ஒரு காளை கன்றுமாகும். இதை அறிந்த அப்பகுதி மக்கள் பசுவுடன் கன்றுகளை ஆா்வத்துடன் பாா்த்து செல்கின்றனா்.
ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையத்தில் மூன்று கன்றுகளை ஈன்ற பசுமாட்டுடன் விவசாயி செல்லதுரை.
