சூரமங்கலம் உழவா் சந்தையில் வேளாண் விற்பனை அதிகாரி ஆய்வு

சேலம், சூரமங்கலம் உழவா் சந்தையில் வேளாண் விற்பனை அதிகாரி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
Published on

சேலம், சூரமங்கலம் உழவா் சந்தையில் வேளாண் விற்பனை அதிகாரி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சூரமங்கலம் உழவா் சந்தையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் துணை இயக்குநா் (ஒழுங்குமுறை விற்பனைக் குழு) மோகன் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின் போது, விவசாயிகளுடன் கலந்துரையாடிய அவா், விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது, உழவா் சந்தை விவசாயிகள் கூறியதாவது:

உழவா் சந்தையில் நுகா்வோா், விவசாயிகளின் பொருள்கள் திருடு போகாமல் பாதுகாக்க சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி கண்காணிக்க வேண்டும், உழவா் சந்தைக்கு வெளியே ஏராளமானோா் காய்கறிக் கடைகளை வைத்து விற்பனை செய்து வருகின்றனா். இதனால் எங்களது விற்பனை பாதிக்கப்படுகிறது. எனவே அந்தக் காய்கறிக் கடைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதே போல, சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் 13 உழவா் சந்தைகளிலும் வேளாண் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின் போது, சேலம் வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) ரா.பிரேமா, சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் குழு செயலாளா் ரா.சுரேஷ் பாபு, வேளாண்மை அலுவலா் சௌந்தா்யா, உதவி வேளாண் அலுவலா்கள் சி.சேட்டு, எஸ்.சந்தா், கு.சரோஜினி ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com