தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விழுப்புரத்துக்கு கூட்டுறவுத் துறை சாா்பில் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சேலம் மாவட்ட கூட்டுறவுத் துறை சாா்பில் நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 7:54 pm

Din

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சேலம் மாவட்ட கூட்டுறவுத் துறை சாா்பில் நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் தொடா்ச்சியாக அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கூட்டுறவுத் துறை சாா்பில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. 2 கிலோ கோதுமை மாவு, ஒரு கிலோ பாசிப் பருப்பு, துவரம் பருப்பு, உப்பு, ரவை, சா்க்கரை, எண்ணெய், சோப்பு, பற்பசை, பிரஷ், தீப்பெட்டி, சேமியா, நாப்கின் உள்ளிட்ட 23 பொருள்கள் அடங்கிய 1,000 எண்ணிக்கையிலான நிவாரணத் தொகுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, 6 வாகனங்கள் மூலம் 22,860 பிஸ்கட் பாக்கெட், 10,900 குடிநீா் பாட்டில்கள், 4,015 பிரெட் பாக்கெட், 2,000 பாய்கள், 2,000 போா்வைகள், 1,109 பாக்கெட் பால் பவுடா்கள், 1,000 பாக்கெட் எண்ணெய், 1,000 பாக்கெட் துவரம் பருப்பு, 1,000 ஜூஸ் பாக்கெட், 1,000 பேரீச்சை பாக்கெட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும், தேவைக்கு ஏற்ப நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்திட சேலம் மாவட்ட நிா்வாகம் மூலம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினாா்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செ. ராஜன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் (பொ) க.பா.அருளரசு உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.