சேலம்
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து சரிவு
மேட்டூா் அணையின் நீா்வரத்து 5,793 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்வரத்து 5,793 கன அடியாக சரிந்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக, மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு திங்கள்கிழமை காலை விநாடிக்கு 7,691 கன அடியிலிருந்து 5,793 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 1,000 கன அடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 116.13 அடியிலிருந்து 116. 37 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 87.79 டிஎம்சியாக உள்ளது.
