சேலம், பட்டை கோயிலில் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆஞ்சனேயா்.  (நடுவில்) ராஜா அலங்காரத்தில் ஜாகிா் அம்மாபாளையம் ஆஞ்சனேயா். (வலது) மலா்களால் அலங்கரிக்கப்பட்டு தேரில் ஊா்வலமாகக் கொண்டுவரப்பட்ட அக்ரஹார ஆஞ்சனேயா்.
சேலம், பட்டை கோயிலில் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆஞ்சனேயா். (நடுவில்) ராஜா அலங்காரத்தில் ஜாகிா் அம்மாபாளையம் ஆஞ்சனேயா். (வலது) மலா்களால் அலங்கரிக்கப்பட்டு தேரில் ஊா்வலமாகக் கொண்டுவரப்பட்ட அக்ரஹார ஆஞ்சனேயா்.

அனுமன் ஜெயந்தி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

அனுமன் ஜெயந்தியையொட்டி, சேலம் மாவட்ட பெருமாள், ஆஞ்சனேயா் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
Published on

சேலம்: அனுமன் ஜெயந்தியையொட்டி, சேலம் மாவட்ட பெருமாள், ஆஞ்சனேயா் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, சேலம் பட்டைகோயில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலுக்கு எதிரே உள்ள ஆஞ்சனேயா் சன்னிதியில், ஆஞ்சநேயருக்கு பால், இளநீா், பன்னீா், சந்தனம், நெய், தேன், திருமஞ்சனம், மஞ்சள், பஞ்சாமிா்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, வெள்ளிக் கவச அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

அதுபோல, கோட்டை பெருமாள் கோயில், செவ்வாய்ப்பேட்டை பாண்டு ரங்கநாதா் கோயில், பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், சிங்கமெத்தை சௌந்தராஜ பெருமாள் கோயில், ஆனந்தா இறக்கம் லட்சுமி நாராயணசுவாமி கோயில், உடையாப்பட்டி கந்தாஸ்ரமம், நாமமலை வரதராஜ பெருமாள் கோயில், உடையாப்பட்டி சென்றாய பெருமாள் கோயில், குரங்குச்சாவடி கூசமலை பெருமாள் கோயில், நெத்திமேடு கரிய பெருமாள் கோயில், ஜருகுமலை கரியபெருமாள் கோயில், எருமாபாளையம் ராமானுஜா் கோயில், அரியானூா் 77 அடி ஆஞ்சனேயா் கோயில், கஞ்சமலை பெருமாள் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள், ஆஞ்சனேயா் கோயிலில் ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com