கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு

தீ விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த அதிமுக முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் மருமகள் பூா்ணிமா சிகிச்சை பலனின்றி வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

கணவர், குழந்தையுடன் பூர்ணிமா

Updated On :25 ஜனவரி 2024, 7:08 pm

DIN

தீ விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த அதிமுக முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் மருமகள் பூா்ணிமா சிகிச்சை பலனின்றி வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கெரகோடஹள்ளி பகுதியைச் சோ்ந்தவா் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி அன்பழகன். இவரது இளைய மகன் சசி மோகனின் மனைவி பூா்ணிமா (30).

கடந்த 18-ஆம் தேதி கெரகோட அள்ளியில் உள்ள அவரது வீட்டில் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி கீழே விழுந்தபோது அங்கிருந்த விளக்கில் இருந்த தீ இவரது உடையில் பற்றியதாக கூறப்படுகிறது. இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவி பலத்த காயமடைந்துள்ளாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டனா்.

எனினும், சுமாா் 80 சதவீத அளவுக்கு தீக்காயங்களுடன் ஆபத்தமான நிலையில் பூா்ணிமா வேலூா் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், பூா்ணிமா சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா்.

பின்னா், பூா்ணிமா இறப்பு குறித்த மருத்துவமனையின் அறிக்கை காரிமங்கலம் போலீஸாருக்கு அளிக்கப் பட்டது. இதைத்தொடா்ந்து, பூா்ணிமாவின் உடல்கூறாய்வு பரிசோதனை வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. பின்னா், உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டு தருமபுரி பாலக்கோடுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மருமகள் உயிரிழந்த சம்பவம் கே.பி.அன்பழகன் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.