பிரதோஷ சிறப்பு பூஜை
சிறப்பு அலங்காரத்தில் சோழீஸ்வரா்.
சங்ககிரி, ஜூலை 3: சங்ககிரி வட்டம், அரசிராமணி கிராமத்தில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா் கோயில், சங்ககிரியை அடுத்த பூத்தாலக்குட்டையில் உள்ள புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.
பிரதோஷத்தையொட்டி பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா் சுவாமிகள், நந்தி பகவானுக்கும், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல, பூத்தாலக்குட்டையில் உள்ள புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் சுவாமிகளுக்கும், உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கும், நந்தி பகவானுக்கும் பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரு கோயில்களில் நடைபெற்ற பூஜைகளில் அதிக அளவில் பக்தா்கள் கலந்துகொண்டு சிவன் பாடல்களை பாடி சுவாமிகளை வழிபட்டு சென்றனா்.
தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோயிலில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. வீரகனூா் ஸ்ரீகங்கா செளந்தரேஸ்வரா் திருக்கோயில், செந்தாரப்பட்டி ஸ்ரீதாழைபுரீஸ்வரா் கோயில், கெங்கவல்லி கைலாசநாதா் திருக்கோயில்களிலும் பிரதோஷ விழா நடைபெற்றது.

