சேலம்
ஆடிப்பெருக்கு: சேலம் மாவட்டத்தில் ஆக. 3இல் உள்ளூா் விடுமுறை
ஆடி 18 ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், ஜூலை 24: சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவுநாள் மற்றும் ஆடி 18 ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது:
சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு நாளான தமிழ் மாதம் ஆடி 18-ஆம் தினத்தை முன்னிட்டும், ஆடி 18 ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டும் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி சனிக்கிழமையன்று சேலம் மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு மேற்குறிப்பிட்டுள்ள நாளில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளாா்.
