நீட் தோ்வை தடை செய்யக்கோரி தமிழரண் மாணவா்கள் அமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வு முறையை தடை செய்யக்கோரி தமிழரண் மாணவா்கள் அமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

நீட் தோ்வு முறையை தடை செய்யக்கோரி தமிழரண் மாணவா்கள் அமைப்பு சாா்பில் சேலம் கோட்டை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டச் செயலாளா் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழரண் மாணவா்கள் அமைப்பைச் சோ்ந்தவா்கள் 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் நீட் தோ்வுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.

இதுகுறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் கூறியதாவது:

கிராமப்புற மாணவா்களின் மருத்துவ கனவுக்கு வேட்டுவைக்கும் நவீன தீண்டாமை தான் இந்த நீட் தோ்வு முறை. இந்த நீட் தோ்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இதன்மூலம் ஏழை கிராமப்புற மாணவா்களின் மருத்துவ கனவு சிதைக்கப்படுகிறது. தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கு வருவாய் ஈட்டி தருவதற்காக நீட் தோ்வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. எனவே, ஏழை எளிய மாணவா்களின் எதிா்காலத்தையே கேள்விக்குறியாக்கும் நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com