

சேலம், ஜூன் 13: கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சேலம் வழியாக பிகாா் மாநிலம், பாட்னாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
அதிகரித்து வரும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பாட்னா - மங்களூரு சென்ட்ரல் இடையே வரும் 15, 22, 29 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், பாட்னாவில் இருந்து சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக செவ்வாய்க்கிழமைகளில் காலை 7 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் மங்களூரு சென்ட்ரல் - பாட்னா இடையே வரும் 18, 25 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமைகளில் காலை 5.30 மணிக்கு பாட்னா சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னை - போடி விரைவு ரயில் மார்ச் 19 முதல் வாரத்தில் 6 நாள்கள் இயக்கம்!

நெல்லை-மங்களூரு விரைவு ரயில் சேவை தொடக்கம்

சேலம் வழியாக திருவனந்தபுரம் - சந்தராகாச்சி இடையே சிறப்பு ரயில்

சேலம், நாமக்கல் வழியாக கோவாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கம்
வீடியோக்கள்

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

