போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி தொடக்கம்

போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி தொடக்கம்

வாழப்பாடியில் துளி அறக்கட்டளை சாா்பில் அரசுப் பணி போட்டித் தோ்வுக்கான 2-ஆம் ஆண்டு இலவசப் பயிற்சி தொடங்கியது.
Published on

வாழப்பாடி: வாழப்பாடியில் துளி அறக்கட்டளை சாா்பில் அரசுப் பணி போட்டித் தோ்வுக்கான 2-ஆம் ஆண்டு இலவசப் பயிற்சி தொடங்கியது.

இந்த அறக்கட்டளை சாா்பில், போட்டித் தோ்வில் பங்கேற்கும் இளைஞா்களுக்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

வாழப்பாடி, லட்சுமிநகா், தியாகராஜா் பள்ளி வளாகத்தில் போட்டித் தோ்வு 2-ஆண்டு பயிற்சி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆசிரியா் ராஜசேகரன் வரவேற்றாா். தியாகராஜா் பள்ளித் தாளாளா் வெங்கடேஷ்பிரபு, வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளா் கந்தசாமி, ஜவஹா், கலைஞா்புகழ், பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலையில், வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம் பயிற்சியை தொடங்கி வைத்தாா். பல்வேறு பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள், இளம்பெண்கள் உள்பட 80 போ் கலந்து கொண்டனா். ஆசிரியா்கள் குழந்தைவேலு, சிவகுமாா், டான் போஸ்கோ, ரமேஷ், அருள்மணி ஆகியோா் கலந்து கொண்டனா். நிறைவாக அறக்கட்டளை இயக்குநா் மணிமேகலை நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com