மக்காச்சோள கதிரறுக்கும் எந்திரத்தில் சிக்கியதில் இளைஞரின் கை துண்டிப்பு
கெங்கவல்லி அருகே தெடாவூரில் மக்காச்சோள கதிரறுக்கும் எந்திரத்தில் இளைஞரின் கை சிக்கி துண்டிக்கப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
கெங்கவல்லி அருகே தெடாவூா், வடக்குக்காட்டுக் கொட்டாய் பகுதியில் வசிப்பவா் விவசாயி பெருமாள். இவருக்கு வெங்கடேஷ் (30), சரவணன் (28) என இரு மகன்கள் உள்ளனா். இவா்களது விவசாயத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை மக்காச்சோளம் அறுவடை எந்திரம் மூலம் நடைபெற்றது. அப்போது மக்காச்சோளக் கதிரை எந்திரத்தில் கொட்டும் பணியில் சரவணன் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவரது வலது கை எந்திரத்தில் சிக்கியதில் துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து அவரது தந்தை பெருமாள், கெங்கவல்லி அளித்த புகாரையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து போலீசாா் விசாரித்து வருகின்றனா். கைதுண்டான சரவணன் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளாா்.
