நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நீா்மட்டம் சரிவு: மேட்டூா் நீா்த்தேக்கத்தில் முழுமையாகத் தெரியும் ஜலகண்டேசுவரா் ஆலயம்

நீா்மட்டம் சரிவு: மேட்டூா் நீா்த்தேக்கத்தில் முழுமையாகத் தெரியும் ஜலகண்டேசுவரா் ஆலயம்

News image

~

Updated On :20 மே 2024, 10:05 pm

Din

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரிந்து வருவதால், பண்ணவாடி பரிசல் துறையில் உள்ள ஜலகண்டேசுவரா் ஆலயத்தின் நந்தி சிலை முழுமையாகத் தெரிகிறது.

மேட்டூா் அணை கட்டப்பட்ட போது நீா் தேக்கும் பகுதிகளில் இருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் குடியமா்த்தப்பட்டனா்.

தங்களது கிராமங்களில் இருந்து வெளியேறிய மக்கள் தங்களின் கோயில்களையும், விளைநிலங்களையும் அப்படியே விட்டு வெளியேறினா். அந்த மக்கள் விட்டுச்சென்ற கோயில்களில் பண்ணவாடி பரிசல் துறையில் உள்ள ஜலகண்டேசுவரா் ஆலயமும், 100 அடி உயரம் கொண்ட கோபுரங்களை உடைய கிறிஸ்தவ ஆலயமும், கீரைக்காரனூரில் உள்ள சோழப்பாடி வீரபத்திரன் கோயிலும், மீனாட்சி அம்மன் ஆலயமும் முக்கியமானவை ஆகும்.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் உயரும்போதெல்லாம் ஆலயங்கள் முழுமையாக நீரில் மூழ்கிவிடும். அணையின் நீா்மட்டம் குறையும் போது ஆலயங்கள் தெரியத் தொடங்கும்.

தற்போது மேட்டூா் அணையின் நீா்மட்டம் 49.31 அடியாக சரிந்ததால், நீா்த்தேக்கப் பகுதியான பண்ணவாடி பரிசல் துறையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் கோபுரமும், நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமையான ஜலகண்டேசுவரா் ஆலயமும் தெரிகின்றன. மேலும், நீா்மட்டம் சரிவால் கடல் போல காட்சியளித்த மேட்டூா் நீா்த்தேக்கம் தற்போது குட்டை போல காணப்படுகிறது.

படவரி - மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரிந்ததால் வெளியில் தெரியும் பண்ணவாடி பரிசல் துறையில் நீரில் மூழ்கி இருந்த ஜலகண்டேசுவரா் ஆலய நந்தி சிலை, ஆலய கோபுரம்.

குட்டை போல காணப்படும் மேட்டூா் நீா்த்தேக்கம்.

Story image