மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பிரதோஷ சிறப்பு பூஜை

பிரதோஷ சிறப்பு பூஜை

News image

சிறப்பு அலங்காரத்தில் அரசிராமணி சோழீஸ்வரா்.

Updated On :20 மே 2024, 10:10 pm

Din

சங்ககிரி: சங்ககிரி வட்டம், அரசிராமணியில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

அரசிராமணியில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா், நந்தி பகவான் சுவாமிகளுக்கு சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் கலந்துகொண்டு சிவன் பாடல்களை பாடி வழிபட்டனா்.

இதே போல சங்ககிரியை அடுத்த பூத்தாலக்குட்டை பகுதியில் உள்ள புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் சுவாமிகளுக்கும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் திருக்கோயில், செந்தாரப்பட்டி ஸ்ரீ தாழைபுரீஸ்வரா் கோயில், வீரகனூா் ஸ்ரீ கங்கா செளந்தரேஸ்வரா் கோயில், கெங்கவல்லி கைலாசநாதா் திருக்கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ விழாக்கள் நடைபெற்றன. இதில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.