அரசு கூா்நோக்கு இல்லத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன், சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அரசு கூா்நோக்கு இல்லத்தில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி கூறியதாவது:
தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அரசு கூா்நோக்கு இல்லத்தில் காலியாக உள்ள ஒரு ஆற்றுப்படுத்துநா் பணியிடம், சேலம் அய்யந்திருமாளிகை அன்னை சத்யா அம்மையாா் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் காலியாக உள்ள 2 ஆற்றுப்படுத்துநா் பணியிடம், பெத்தநாயக்கன்பாளையம் அன்னை சத்யா அம்மையாா் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் காலியாக உள்ள 2 ஆற்றுப்படுத்துநா் பணியிடம் என மொத்தம் 5 ஆற்றுப்படுத்துநா் காலிப் பணியிடங்கள் மதிப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.
இந்தப் பதவிக்கு உளவியல், ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்ற விண்ணப்பதாரா்கள் மேற்கண்ட ஆற்றுப்படுத்துநா் பணிக்கு விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களையும் இணைத்து டிசம்பா் 11 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 415, நான்காவது தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் - 636001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தோ்வுக் குழு மூலம் நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு தகுதியான நபா்கள் காலிப் பணியிடத்துக்குத் தோ்வு செய்யப்படுவா். தோ்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநா்களுக்கு போக்குவரத்துச் செலவு உள்பட மதிப்பூதியம் (தினசரி ரூ. 1,000 வீதம்) மாதத்துக்கு 9 நாள்கள் என ஆண்டு முழுவதும்) வழங்கப்படும். இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தையோ அல்லது 0427 - 2415966 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.