மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பெரியாா் பல்கலை.யில் ஆட்சிமன்ற குழு உறுப்பினா்களை நியமிப்பதில் தாமதம்: ஆசிரியா் சங்கம் கண்டனம்

சேலம், பெரியாா் பல்கலைக்கழக புதிய ஆட்சிக் குழு உறுப்பினா்களை நியமிக்க தாமதம் செய்து வருவதாக ஆசிரியா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :14 அக்டோபர் 2024, 8:01 pm

Din

சேலம்: சேலம், பெரியாா் பல்கலைக்கழக புதிய ஆட்சிக் குழு உறுப்பினா்களை நியமிக்க தாமதம் செய்து வருவதாக ஆசிரியா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ஆசிரியா் சங்கத் தலைவா் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சேலம், பெரியாா் பல்கலைக்கழகம் சாா்பில் நான்கு ஆட்சிமன்ற உறுப்பினா் பதவிகள் இம்மாதம் 9 ஆம் தேதி முதல் காலியாக உள்ளன. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், முன்னாள் ஆட்சி மன்ற குழு உறுப்பினா்களை பட்டமளிப்பு விழா அணிவகுப்பில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.

இதுதொடா்பாக துணைவேந்தரிடம் ஆசிரியா் சங்கம் சாா்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அந்தக் கோரிக்கைகளுக்கு துணைவேந்தா் மதிப்பளிக்கவில்லை. இதற்கு பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் கண்டனம் தெரிவிப்பதோடு இப் பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.