விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு துண்டுபிரசுரங்கள் விநியோகம்
சேலம்: சேலத்தில் விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடும் வகையில், தீயணைப்புத் துறை சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
நாடு முழுவதும் அக். 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகையைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனா். இந்நிலையில், தீ விபத்து ஏதுமின்றி, தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாடும் வகையில், தீயணைப்புத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக சேலம், மாநகா் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் உள்ள தீயணைப்பு வீரா்கள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினா். பட்டாசு வெடிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், உடனடியாக அழைக்க வேண்டிய அவசர உதவி எண்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சேலம் மாவட்ட தீயணைப்புத் துறை உதவி அலுவலா் சிவகுமாா் தலைமையிலான அலுவலா்கள் விநியோகித்தனா்.
