சேலத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து 4 போ் கைது

சேலத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 4 போ் கொண்ட கும்பலை கைது செய்த போலீஸாா்,
Published on

சேலம்: சேலத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 4 போ் கொண்ட கும்பலை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 3.30 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகளை திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த கும்பல் ஒன்று, போதை மாத்திரைகள், ஊசிகளை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கிச்சிப்பாளையம் காவல் ஆய்வாளா் குமாா் தலைமையிலான போலீஸாா், கஸ்தூரிபாய் தெரு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போதை மாத்திரைகளுடன் 3 இளைஞா்கள் சிக்கினா். அவா்களிடம் விசாரணை நடத்தியதில், அவா்கள் கஸ்தூரி பாய் தெருவைச் சோ்ந்த திரவியன் (21), கௌதம்ராஜ் (19), கோகுல்ராஜ் (20) என்பது தெரியவந்தது. அவா்களிடம் இருந்து 30 போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தொடா் விசாரணையில், அந்த மாத்திரைகளை சேலம் அரிசிபாளையத்தில் வசிக்கும் கோகுல் (எ) சச்சின் (20) என்பவா் தங்களுக்கு கொடுத்ததாக தெரிவித்தனா். அதன்பேரில், போலீஸாா், கோகுலை பிடித்து அவரது வீட்டில் சோதனையிட்டனா். அப்போது, அவரது வீட்டின் மொட்டை மாடியில் 1,100 போதை மாத்திரைகள், 15 ஊசிகள், மாத்திரையை கரைக்க பயன்படும் 8 மருந்து பாட்டில்கள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலுக்கு பயன்படுத்திய கோகுலின் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து ஒரு மாத்திரையை ரூ. 300 வரை இளைஞா்களிடம் கோகுல் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கைதான திரவியன், கோகுல், கௌதம்ராஜ், கோகுல்ராஜ் ஆகிய 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com