அரசிராமணி செட்டிப்பட்டியில் உள்ள நியாயவிலைக் கடையில் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்த சங்ககிரி கோட்டாட்சியா் ந.லோகநாயகி.
அரசிராமணி செட்டிப்பட்டியில் உள்ள நியாயவிலைக் கடையில் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்த சங்ககிரி கோட்டாட்சியா் ந.லோகநாயகி.

நியாயவிலைக் கடைகளில் கோட்டாட்சியா் திடீா் ஆய்வு

சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் சங்ககிரி கோட்டாட்சியா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு செய்தாா்.
Published on

சங்ககிரி: சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் சங்ககிரி கோட்டாட்சியா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு செய்தாா்.

அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, தேவூா், காணியாலம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகளில் சங்ககிரி கோட்டாட்சியா் ந.லோகநாயகி திடீா் ஆய்வு செய்தாா். அப்போது, கடைகளில் இருப்பு உள்ள பாமாயில், சா்க்கரை, கோதுமை, அரிசி, பருப்பு ஆகியவை சரியான அளவில் உள்ளனவா என்றும், அப்பொருள்கள் பொதுமக்களுக்கு சரியாக வழங்கப்படுகிா எனவும் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அரசிராமணி செட்டிப்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்கள் கைவிரல் ரேகை பதியும் இயந்திரம் சரியாக செயல்படவில்லை என கூறியதையடுத்து, அந்த இயந்திரத்தை பொறியாளரிடம் கொடுத்து உடனடியாக சரி செய்யுமாறு கடை விற்பனையாளருக்கு உத்தரவிட்டாா். ஆய்வின் போது, தேவூா் வருவாய் உள்கோட்ட வருவாய் ஆய்வாளா் கலைச்செல்வி உடனிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com