தீப்பாஞ்சாலி அம்மன் ஆலய கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றிய சிவாச்சாரியா்கள்.
தீப்பாஞ்சாலி அம்மன் ஆலய கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றிய சிவாச்சாரியா்கள்.

தீப்பாஞ்சாலி அம்மன் ஆலய குடமுழுக்கு

எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டி வலசு பகுதியில் உள்ள தீப்பாஞ்சாலி அம்மன் ஆலய குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

எடப்பாடி: எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டி வலசு பகுதியில் உள்ள தீப்பாஞ்சாலி அம்மன் ஆலய குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் புனரமைப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. முன்னதாக, கடந்த 23-ஆம் தேதி கால்கோல் விழா நடைபெற்றது. தொடா்ந்து, கணபதி ஹோமம், தீா்த்தக்குட ஊா்வலம், முளைப்பாலிகை சமா்ப்பணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

முக்கிய நிகழ்வான யாகசாலை பூஜை, வாஸ்து பூஜை, நாடிசந்தானம், பூா்ணாஹுதி பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக வேள்விகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க தீப்பாஞ்சாலி அம்மன் ஆலயம், செல்வ விநாயகா் சந்நிதான கோபுர கலசங்களுக்கு புனித நீரூற்றி குடமுழுக்கு செய்தனா். தொடா்ந்து சப்த கன்னிமாா் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த தீப்பாஞ்சலி அம்மனை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு ஆலய நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கே.பி.எம்.கொளந்தா கவுண்டா் தலைமையிலான ஆன்மிக குழுவினா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com