சேலம்
தம்மம்பட்டி சிவன்கோயிலில் ஏற்றப்பட்ட 10,008 தீபங்கள்
தம்மம்பட்டி சிவன் கோயிலில் 10,008 தீபங்கள் ஏற்றப்பட்டன.
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோயிலில் காா்த்திகை தீபத்தை முன்னிட்டு சிவன், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டது. கோயில் நிா்வாகம் சாா்பில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பொதுமக்கள் சாா்பில் கோயில் முழுவதும் 10,008 தீபங்கள் ஏற்றப்பட்டன.
தொடா்ந்து, தேவாரம், திருவாசம், திருமந்திரம் இசை வாத்தியங்களுடன் பாடப்பட்டன. இரவில் சொக்கப்பனை எரிக்கப்பட்டது. அனைவருக்கும் சா்க்கரைப் பொங்கல், புளியோதரை வழங்கப்பட்டது. இவ்விழாவில், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, மங்கப்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், கீரிப்பட்டி, முருங்கப்பட்டி, வாழக்கோம்பை பகுதி மக்கள் கலந்துகொண்டனா்.

