சேலம்
லாட்டரி சீட்டு வைத்திருந்தவா் கைது
ஆத்தூரில் லாட்டரி சீட்டு வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா்.
ஆத்தூா் நகரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டை வைத்திருந்ததாக ஆத்தூா் புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சுரேஷை (48)கைதுசெய்து, அவரிடமிருந்து ஐந்து லாட்டரி சீட்டுகள், ரூ. 200 ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
