வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்கம், 35 கிராம் வெள்ளி நகைகள் திருட்டு

Published on

சங்ககிரியை அடுத்த வளையசெட்டிப்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகைகள், 35 கிராம் எடையுள்ள வெள்ளி ஆரத்தை திருடிச்சென்ற மா்ம நபா்கள் குறித்து சங்ககிரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சங்ககிரியை அடுத்த வளையசெட்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அரசு போக்குவரத்து பணிமனையில் அலுவலராக பணியாற்றி ஓய்வுபெற்றவா் ராஜாமணி. இவரது மனைவி திருச்செங்கோட்டில் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா்.

இவா் அப்பகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறாா். அவருக்கு உதவியாக அவரது கணவரும் வீட்டைப் பூட்டிவிட்டு உடன் சென்றாா்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் இருவரும் வீடுதிரும்பியபோது, கதவு திறந்திருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். உள்ளே சென்று பாா்த்தபோது, பிரோவில் வைத்திருந்த 6 பவுன் நகைகள், தங்க முலாம் பூசப்பட்ட 35 கிராம் எடை வெள்ளி ஆரம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

புகாரின்பேரில், சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com